ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாடு மற்றும் இந்தி பேசாத தென் மாநிலங்கள் மீது கட்டாயமாக இந்திமொழியை திணிப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருமொழிக்கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், இந்தி திணிப்பை தடுக்கும் வகையிலும் ஒரு புதிய சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தின் நடப்பு அமர்வில் தமிழக அரசு தாக்கல் செய்யத் தயாராகி வருகிறது என்ற செய்தி நேற்று இணையத்தில் பரவி விவாதங்களை எழுப்பிய நிலையில்,
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில்,
” தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி !
தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது. இது முற்றிலும் வதந்தியே.
“அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை ” என்று சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.
வதந்தியைப் பரப்பாதீர்! ” என தெரிவித்துள்ளது.