சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 10-ம் தேதி வெளியான படம், ‘பராசக்தி’. இதன் நன்றி அறிவிப்பு விழா, சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் பேசிய ஶ்ரீலீலா, “வலுவான கதாபாத்திரத்தில் முதல் முறையாக நடித்து உள்ளேன். என்னுடைய கதாபாத்திரம் நான் பார்க்கும் பொழுது கண் கலங்க வைத்து விட்டது” என்றார்.
இயக்குநர் சுதா கொங்கரா, ‘என்னுடைய படத்தில் முதல் தடவை நடிப்பதால் சில கடினங்கள் இருந்திருக்கும். காலை 7 மணிக்கு ஷூட் இருக்கும். இதை எல்லாம் கேட்கும் பொழுது கடினமாக இருக்கும். ஒரு நாள் சிவகார்த்திகேயனை அழைத்து 8.30 மணி முதல் 12.30 மணி வரை என்னை பற்றி பேசினேன். எனக்கு புரளி பேசுவது பிடிக்காது. என் படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.
சிவகார்த்திகேயன், “சுதா கொங்கரா என்னிடம் கதையை சொல்லி முடிக்கும் பொழுது தமிழ் உணர்வு மற்றும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் கருதினேன். இப்படத்தில் நடித்தால் என்னை பற்றி காலத்துக்கும் பேசுவார்கள். ஒரு நடிகனாக எனக்கு பெருமை. ஒரு நடிகனாக பல்வேறு சவால்கள் இந்த படத்தில் நடிக்கும் பொழுது வரும். இந்த படத்தில் காட்ட பட்ட காட்சிகளை அனைத்தும் நிஜம் என்று சொல்ல முடியாது சினிமாக்காக சிலவற்றை சேர்த்துள்ளோம்.
இயக்குநர் எந்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு அழைத்தாலும், உடனே போய் நிற்பது என்னுடைய கடமை. ‘டாக்டர்’ படத்தில் இருந்தே மானிட்டர் பார்க்கும் பழக்கத்தை கைவிட்டேன். காரணம் இது ஒரு இயக்குனரின் படைப்பு அதில் நான் தலையிட விரும்பவில்லை. இந்த எண்ணம் என்னை மென்மேலும் உயர்த்துகிறது.
இந்தப் படம் எப்படி எல்லாரையும் போய் சேரும் என்று எண்ணி இருந்தோமோ, அது பூர்த்தி ஆகி விட்டது. சினிமாத்துறையில் இருந்து ராதிகா, கமல், ரஜினி என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டே வருகின்றனர். “very bold movie, Super second half. Fantastic performance” என்று ரஜினி சார் வாழ்த்து தெரிவித்தார். ‘டாக்டர்’ படத்திலிருந்து தற்போது வரை ரஜினி சார் என்னுடைய படங்களுக்கு தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார் அதற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதுக்கும் ரஜினி சாருக்கு நன்றி.
படம் லாபம் எடுத்ததாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதுவே மிகப்பெரிய வெற்றி” என்றார்.
அதர்வா பேசியதாவது, “இந்தப் படத்தின் கதையை சுதா கொங்கரா சொல்லும் பொழுது பெருமையாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரமான சின்னத்துரை கதாபாத்திரம் மிக அருமையாக இருக்கிறது என்று மக்கள் கூறியதற்கு காரணம் சுதா கொங்கராவின் மகிமை. இது முழுக்க மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரனின் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்தது சந்தோஷம். படத்தில் நடிக்கும் பொழுது நடிகர்களாக தான் வந்தோம் போகப்போக மாணவர்களாக மாறினோம். சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

