எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை – முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  

கரூர் துயரச் சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதால், உண்மையை விளக்க வேண்டியது கடமை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Surya
84 Views
1 Min Read
Highlights
  • கரூர் சம்பவத்தில் தனிநபர் மீது பழி சுமத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை என முதல்வர் உறுதி
  • திட்டமிட்டு அரசு மீது பொய்கள் பரப்பப்படுவதால், உண்மையை விளக்க வேண்டிய கடமை உள்ளது என்று முதல்வர் விளக்கம்.
  • அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!

இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்,கரூர் விவகாரம் குறித்து விளக்கம் அளித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்,மேலும் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

கரூரில் நிகழ்ந்த பெருந்துயரம் தொடர்பாக எந்த ஒரு தனிநபர் மீதும் பழிசுமத்திப் பலிகடா ஆக்குவது நமது நோக்கம் இல்லை. எனினும், திட்டமிட்டு அரசு மீது பொய்களைச் சிலர் பரப்பும்போது, நடந்த உண்மையை விளக்க வேண்டியது கடமையாகிறது.

இனி இப்படி நிகழாமல் தடுப்பதற்கான ‘நிலையான வழிகாட்டு நெறிமுறை’களை (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்பமை உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.

அனைத்தையும் விட மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்ற பொறுப்புணர்வுடன் அனைத்துத் தரப்பினரும் செயல்படுவோம்!என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply