சென்னையில் 500 வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள எரிவாயு விநியோக நிறுவனங்களில் 30,000 பேர் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள எல்பிஜி மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை மாநில எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன. இந்த எரிவாயு, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பின் போது வெளியேறும் மூலப்பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு சப்ளை செய்யப்படுகிறது. இது எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயுவை விட 20 சதவீதம் மலிவானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.

தமிழகத்தில் குழாய்கள் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய எண்ணுார் துறைமுக வளாகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எல்என்ஜி எனப்படும் திரவ இயற்கை எரிவாயு முனையம் உருவாக்கப்பட்டது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து கடல் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. இந்த வாயு வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) வடிவத்திலும், வீடுகளுக்கு பி.என்.ஜி., எனப்படும் குழாய் வழித்தடம் வாயிலாகவும் வினியோகம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2030க்குள் 2.30 கோடி வீடுகளுக்கும், 2785 சி.என்.ஜி., மையங்கள் வாயிலாக வாகனங்களுக்கும் இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், டோரண்ட் காஸ், அதானி உட்பட ஏழு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த முயற்சியின் ஒருங்கிணைப்பு அமைப்பாக “டிட்கோ” எனப்படும் தமிழ்நாடு அரசின் தொழில் வளர்ச்சிக் கழகம் செயல்படும். எரிவாயு நிறுவனங்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு எரிவாயு குழாய்களை அமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன.

சென்னையில் டோரண்ட் நிறுவனம், அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 5000 வீடுகள் குழாயில் எரிவாயு வினியோகிக்க பதிவு செய்துள்ள நிலையில், 500 வீடுகளில் எரிவாயு வினியோகம் செய்கிறது. மாநிலம் முழுதும் இதுவரை 30,000 வீடுகள் குழாய் எரிவாயு பெற, காஸ் வினியோக நிறுவனங்களிடம் பதிவு செய்துள்ளன. வாகனங்களுக்கு வினியோகிக்க, 326 சி.என்.ஜி., மையங்கள் செயல்படுகின்றன.

இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் ஏழு காஸ் வினியோக நிறுவனங்களும், வீடுகளுக்கு குழாய் வழித்தடத்தில் எரிவாயு வினியோகிக்க குழாய் பதிக்கும் பணிகளை வேகமாகச் செய்கின்றன; அந்த பணி நிறைவடையும் இடங்களில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்பதிவு செய்கின்றன.

ஒவ்வொரு நிறுவனமும் பதிவு செய்வோருக்கு, பல்வேறு கட்டண சலுகைகளை வழங்குகின்றன. குழாய் பதிக்க விரைந்து அனுமதி வழங்குமாறு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here