ஆரம்ப காலத்தில் பெரியார் மற்றும் அண்ணாவுடன் பணியாற்றி, பின்னர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய துணையாக இருந்தவர், ஆர்.எம்.வீரப்பன். அவருடைய வாழ்க்கைப் பயணம், சினிமா மற்றும் அரசியலில் ஆற்றிய பங்கு, தமிழுக்கு செய்த அர்ப்பணிப்பு போன்றவற்றை ‘RMV The Kingmaker’ என்ற பெயரில் ஆவணப் படமாக எடுத்துள்ளனர்.
ஆர்.எம்.வீரப்பன் பிறந்த கிராமத்துக்குச் சென்று பல தகவல்களைச் சேகரித்து இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், சரத்குமார், சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட ஆளுமைகளும், ஆர்.எம்.வீரப்பனுடனான தங்கள் நினைவுகளை இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துள்ளனர்.
பினு சுப்பிரமணியம் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்தை, சத்யா மூவிஸ் மற்றும் தி கோல்டன் கிங் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

