தமிழகக் கடலோரப் பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் ஆகஸ்ட் 13 முதல் 18 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 13-ம் தேதி ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஆகஸ்ட் 14-ம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களிலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.