தினந்தோறும் 4 கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள். 5000, 10,000க்கும் கொலைகள் நடக்கும் கேவலமான நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது.

ரூ.5,000, 10,000 கொடுத்தால் கொலை செய்கின்ற கூலிப்படைகளாக நிறைய இளைஞர்கள் மாறுகின்றனர் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு மட்டுமல்ல யார் உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உண்மையில் சொல்ல போனால் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையே நீடிக்கிறது.

தினந்தோறும் 4 கொலைகள் நடக்கிறது. இந்தக் கொலைகளை செய்வது 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக உள்ளார்கள். 5000, 10,000க்கும் கொலைகள் நடக்கும் கேவலமான நிலை தான் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், கஞ்சா, போதை கலாச்சாரத்தால், இளைஞர்கள் அடிமையாகி, கூலிப்படைகளாக மாறிவருவது வருத்தத்துக்குரியதாகும். எனவே, படிப்படியாக மது விலக்கை கொண்டு வந்தால்தான் மட்டும் தமிழகம் அமைதி பூங்காவாக மாறும்.

சென்னை மாநகர காவல் ஆணையரை மாற்றி விட்டால் மட்டும் எல்லாம் மாறி விடாது. சீர்கெட்டு கிடக்கும் சட்டம் – ஒழுங்கை, தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒன்றாக இணையவேண்டும். காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது, அவர்களிடம் பேசி தண்ணீர் பெற்று தரவில்லை, மேகதாது அணை கட்டுவதையும் தடுக்கவில்லை. காங்கிரஸிடம் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here