வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து அதன் பயனர்களின் தேவையை அறிந்து, பல புதிய அப்டேட்களை அதன் தளத்தில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நீண்ட காலமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைக்க பயனர்கள் எதிர்பார்த்த புதியதொரு சூப்பர் அப்டேட்டை இறுதியாக வாட்ஸ்அப் தற்போது வெளியிட்டுள்ளது.
இதுவரை வாட்ஸ்அப் இல் ஸ்டேட்டஸ் வைக்கும் பொழுது 30 வினாடி வீடியோவை மட்டுமே ஸ்டேட்டஸ் ஆக வைக்க வாட்ஸ்அப் அனுமதித்திரிந்தது . மேலும் இந்த 30 வினாடி கால அவகாசத்தை இரட்டிப்பாக்க முடிவு ஆலோசித்தித்து வந்த நிலையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அளவு 60 வினாடிகளாக வைக்கும் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது..