அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக கூடுதலாக 20% வணிக சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு

Priya
12 Views
1 Min Read

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்தியா சந்தித்து வரும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சீர் செய்ய, ஒன்றிய அரசு இன்று (மார்ச் 27, 2026) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் ஒதுக்கீடாக 20% வணிக சிலிண்டர்கள் (Commercial LPG Allocation) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விநியோக அளவு அதிகரிப்பு

ஈரான் – இஸ்ரேல் போருக்கு முன்பு இருந்த விநியோக அளவில், இதுவரை 50% மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் 20% ஒதுக்கீட்டின் மூலம், விநியோக அளவு 70% ஆக உயர்ந்துள்ளது. மீதமுள்ள 30% தேவையைப் பூர்த்தி செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், நிலைமை படிப்படியாகச் சீராகும் என்றும் பெட்ரோலியத் துறைச் செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.

தொழில்துறைக்கு முன்னுரிமை

புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த சிலிண்டர்களைக் கீழ்க்கண்ட முக்கியத் துறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது:

  • ஆட்டோமொபைல் (Automobile): வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் உற்பத்தி ஆலைகள்.
  • ஜவுளித் துறை (Textile): நூற்பு ஆலைகள் மற்றும் சாயப் பட்டறைகள்.
  • இதர துறைகள்: எஃகு (Steel), சாயப் பொருட்கள் (Dye), ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள்.

இந்தத் துறைகள் அதிக தொழிலாளர்களைக் கொண்டவை என்பதால், உற்பத்தியில் தொய்வு ஏற்படாமல் இருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

கூடுதல் சிலிண்டர்களைப் பெற விரும்பும் நிறுவனங்கள், கட்டாயம் எண்ணெய் நிறுவனங்களிடம் (OMCs) பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பைப் பெறுவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply