ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் குரங்கு அம்மை வேகமாகப் பரவி வருவதால், ஆகஸ்ட் 14 அன்று உலக சுகாதார நிறுவனம் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்தது. இது உலகின் பல்வேறு நாடுகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் விமான நிலையங்களில் விஆர்டிஎல் ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான தற்போது நடவடிக்கைகளை பிரதமர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
டெல்லியில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக மையங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல், அனைத்து மாநில அரசுகளும் தங்கள் அதிகார வரம்பில் உள்ள மருத்துவமனைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட VRDL ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை வைரஸைக் கண்டறியும் கருவிகள் உள்ளன. குரங்கு அம்மை நோயை கடைசி மார்ச் 2024 ல் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.