மெட்ரோ ரயில் நிலையங்கள் கட்டுமானப் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒருவார காலத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூடியிருப்பதாவது ;

சேத்துப்பட்டிலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கல்லூரி சாலை, ஹாடோஸ் சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக ஜெமினி மேம்பாலத்தை அடையும் வகையிலான இந்தப் பாதைகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாகச் செயல்படும்.

1197366 1

மேலும் ஜெமினி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை, டாக்டர் எம்.ஜி. ஆர்.சாலை (ஆற்காடு சாலை) வழியாக வள்ளுவர் கோட்டத்தை நோக்கிச் செல்லலாம் ,மாற்றுப் பாதை ஒரு வழிப்பாதை யாகச் செயல்படும். அதேபோல் அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

அதேபோல் வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை உத்தமர் காந்தி சாலைவழியாகத் திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபின்னை சாலை, ஜி.என். செட்டிசாலை வழியாக அண்ணா மேம்பாலம் ஜெமினி மேம்பாலம் சென்று அடையலாம். இந்த போக்குவரத்து மாற்றம் ஒரு வார காலத்துக்கு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here