சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை மின்சார ரயிலை கையகப்படுத்துவதில் இறுதிக்கட்டத்தை அடைந்து உள்ளது.
இதற்கான Proposal ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. STATION மறுவடிவமைப்பு, புதிய ரோலிங் ஸ்டாக் போன்ற பல மாற்றங்கள் இதன் மூலம் செயல்படுத்தப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் சில மாதங்கள் மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டத்தை (Chennai Mass Rapid Transit System ) கையகப்படுத்தும். அதாவது பறக்கும் ரயில் நிலையத்தை கையகப்படுத்தவுள்ளது.
இதன் முதல் கட்டமாக பறக்கும் ரயில் நிலையங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் Appகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.