நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திருச்சியில் போட்டியிட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் துரை வைகோ சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதையடுத்து, ம.தி.மு.க.வின் 31வது ஆண்டு விழா மற்றும் லோக்சபா தேர்தல் வெற்றியை முன்னிட்டு ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை கட்சி கொடியேற்று விழா நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். அதன்படி, கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் பொதுக்குழு தொடர்பான அறிவிப்பை வைகோ இன்று வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதிமுகவின் 30-வது பொதுக்குழு ஆகஸ்ட் 4-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணாநகர் 3-வது அவென்யூ-நியூ ஆவடி சாலை சந்திப்பில் இருக்கும் விஜய் ஸ்ரீ மஹாலில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும் எனத் அறிவித்துள்ளார்.