கனா, எப்.ஐ.ஆர் படங்களில் இணை இயக்குனர் மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’.இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது.
தற்போது, இந்த படத்தின் ‘டம்மா கோலி’ பாடல் வெளியாகியுள்ளது. . ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை கானா சேட்டு பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.