சென்னை மாநகரின் சமச்சீர் வளர்ச்சியை உறுதிசெய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மார்ச் 14, 2024 அன்று தங்கச்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் கீழ் ரூ.4,378 கோடி மதிப்பிலான 219 திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் வில்லிவாக்கம் சிவசக்தி காலனியில் கடந்த மாதம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் ஆறு புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவில் பங்கேற்று ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதன் ஒரு பகுதியாக கொளத்தூர் மாவட்டம், ஜி.கே.எம் காலனியில் புதிதாக கட்டப்பட்ட அரசு தொடக்கப்பள்ளி, புதுப்பிக்கப்பட்ட மதுரை சாமி மடத்தில் புனரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடம், நேர்மை நகர் மாயன் பூமியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16ஆம் நாள் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

ஜி.கே.எம் காலனியில் ஜம்புலிங்கம் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூட கட்டுமானப் பணிகளை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள வரித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here