திருச்சி, கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110- விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவையில் கலைஞர் நூலகம் கட்டுவதற்காக கோயம்புத்தூர் காந்தி நகர் பஸ் பணிமனை எதிர் திசையில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய நூலக கட்டுமான பணிகளை துரிதப்படுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. கலைஞர் நூலகம், அறிவியல் மையம் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை (டெண்டர்) பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.
விருப்பம் உள்ள நிறுவனங்கள் அக்டோபர் 16-ம் தேதி மாலை 3 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத் தரம் வாய்ந்த நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள், இணைய வளங்களும் இடம்பெறும் வகையில் நூலகம் அமைக்கப்பட உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here