ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் தயாரித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் படம் “காதலிக்க நேரமில்லை”.
ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, டி.ஜே. பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
‘காதலிக்க நேரமில்லை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது, ஆனால் சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.
இதற்கிடையில், இப்படத்தின் இசை உரிமையை டீ சீரியஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதை அறிவிக்க புதிய கிளிம்ஸ் விடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.