ரயில் டிக்கெட்டுகளை வழங்குவதற்கான வசதியாளர்களைப் பெற ரயில் நிலையங்களில் ஏ.டி.வி.எம் எனப்படும் தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே கூடுதலாக ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்டர்கள், ஏடிவிஎம்கள் மூலம் டிக்கெட்டுகளை வழங்கும், அதேபோல் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் அமைப்பு (UTS) மொபைல் பயன்பாடு மூலம் டிஜிட்டல் டிக்கெட்டுகளை வழங்கும். அதனால் பயணிகள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
இந்நிலையில் ஏடிவிஎம்கள் மூலம் டிக்கெட் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டுகள் தேவைப்படுவதால் ,பல பயணிகள் இதை பயன்படுத்தி டிக்கெட் வாங்குவதில்லை. அதனால் ஏடிவிஎம் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்குவதற்கான வசதியாளர்களை தெற்கு ரயில்வே விரைவில் நியமிக்க உள்ளது.