பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷான். 19 வயதான ஆயிஷாவின் இதயம் பாதிக்கப்பட்டதால், சிகிச்சைக்காக பாகிஸ்தான் நாட்டில் இருந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயிஷாவின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்தில் உள்ள பம்ப் வால்வில் கசிவு ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இதனால் கட்டாயம் இதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
அந்த நேரத்தில் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இதயம் வரவழைக்கப்பட்டு ஆயிஷாவிற்கு இதய மாற்று அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஆயிஷாவின் தாய் சனோபர் கூறுகையில், “ வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. பாகிஸ்தானின் மாற்று அறுவை செய்யும் அளவுக்கு நவீன வசதிகள் இல்லை. இந்தியாவை நாங்கள் நட்பாக உணருகிறோம். இந்த நேரத்தில் இந்திய அரசுக்கும் இந்திய மருத்துவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.
இந்தியாவை எதிரியாக பார்க்கும் பாகிஸ்தான் நாட்டினருக்கும் இதயம் கொடுத்து அன்பு காட்டுவதில்…நம் தாய் நாட்டிற்கு ஈடு இணை ..
இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது நம் இந்தியா…