மத்தியப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜிதேந்திர பட்வாரி கூறுகையில், இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் இரட்டை இலக்க வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி. இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் போட்டியிடும் 27 இடங்களில் காங்கிரஸுக்கு குறைந்தது 10 இடங்கள் கிடைக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களிலும், மத்திய பிரதேசத்தில் கடும் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், இந்த முறை வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இந்நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்குகளை எண்ணும் போது வாக்குப்பதிவு எந்திரங்களில் கவனமாக இருக்குமாறு கட்சித் தலைமை கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு இனிப்புகள் வழங்க அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அவ்நீஷ் பண்டேலா 100 கிலோ லட்டு ஆர்டர் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இது பற்றி மாநில காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் நலனுக்காக பாஜக உழைத்திருந்தால், கொண்டாட மற்றொரு வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால், இந்த முறைபாஜகவால் கொண்டாட முடியாது. காங்கிரஸின் ஒவ்வொரு தொண்டரும் ஆற்றல் நிரம்பிக் காணப்படுகின்றனர்.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து போபால் வந்து சேர காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ரயில் டிக்கெட்பதிவு செய்துள்ளனர். இது மத்திய பிரதேசத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் அரசை மாற்றும்முடிவை மக்கள் எடுத்துவிட்டனர். இவ்வாறு அப்பாஸ் ஹபீஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here