தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று முற்பகல் வரை கன மழை பெய்யும்.

இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.

குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மாவட்ட கடலோர பகுதிகளில், வரும் 12ம் தேதி வரை, மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும்.

மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமானின் வடக்கு பகுதி, வங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதி, தெற்குப் பகுதி உள்ளிட்ட பகுதிகளில், வரும் 13ம் தேதி வரை மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நாலுமுக்கு பகுதியில், 11 செ.மீ., மழை பெய்துள்ளது.

கோவை, கன்னியாகுமரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, நீலகிரி, திருச்சி, மயிலாடுதுறை, தென்காசி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here