இது தொடர்பாக நிருபர்களிடம் அன்புமணி கூறியதாவது: கள்ளச்சாராய மரணங்கள் அரசின் தோல்வியை காட்டுகிறது. மக்களை ஓட்டு வங்கி அரசியலாக அரசு பார்க்கிறது. உயிரிழப்பு என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது. பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கள்ளச்சாராயம் குடித்து, சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்த பிறகு அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஒரு மாதம் ஆட்சி எங்களிடம் இருந்தால் போதும், தமிழகத்தை சுத்தம் செய்வோம். ராமதாஸ் போாரட்டம் காரணமாக பல கட்சிகள் பூரண மதுவிலக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டன.
போலீசாருக்கு தெரியாமல் சாராயம் காய்ச்ச முடியாது. கஞ்சா விற்க முடியாது. தமிழகம் கஞ்சா நாடாக மாறிவிட்டது. அமெரிக்காவில் கிடைக்கும் போதைப் பொருள் இங்கு விற்கிறது. இது குறித்து முதல்வரிடம் தெரிவித்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

வருங்காலத்தில் இது போன்று நடக்கக்கூடாது என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு தான். சிபிசிஐடி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பார்கள். விசாரணை நேர்மையாக உண்மையாக இருக்காது. கண்துடைப்பாக 10, 15 பேரை கைது செய்வார்கள். டாஸ்மாக் கடையை படிப்படியாக குறையுங்கள். குடிநோயாளிகளை அரசு உருவாக்கி உள்ளது. என்ன நிலைக்கு தமிழகம் செல்கிறது. மதுவை திணிக்கிறார்கள். செந்தில்பாலாஜி இருந்தால் மது விற்பனை 70 ஆயிரம் கோடிக்கு சென்று இருக்கும்.
கல்வராயன்மலை வாழ் மக்களுக்கு மத்திய அரசு திட்டங்கள் நிறைய உள்ளது. அதனை கொண்டு சேர்ப்பது கிடையாது. வாழ்வாதாரம், படிப்பு இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களை ஓட்டு வங்கியாக வைத்துள்ளனர். இவர்கள் படித்து முன்னேற கூடாது என திமுக., நினைக்கிறது. வன்னியர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு திமுக செய்த துரோகம் இது. அவர்கள் படித்தால் அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். பூரண மதுவிலக்கு தொடர்பாக பிரசாரம் செய்யும் போது, பெண்கள் ஆதரவு தெரிவிப்பார்கள். தற்போது குறைந்துள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து குடிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அன்புமணி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here