சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளைச்சாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழக அரசு கேபிள், ‘டிவி’ வாடிக்கையாளர்கள், 10 லட்சம் பேர் உள்ளனர். நேற்று முன்தினம் காலை 5:00 மணி முதல், கேபிள், ‘டிவி’ ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் கடும் துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அரசு கேபிள், ‘டிவி’ ஆபரேட்டர்கள், 10,000த்துக்கும் மேற்பட்டோர், வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறுவதோடு, தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை உருவாகி உள்ளது.
அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனத்தின் நிர்வாகிகளை தொடர்பு கொண்டபோது, ‘சாப்ட்வேர் பிரச்னை’, சில தினங்களில் சரியாகிவிடும் என்கின்றனர்.
ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன், இதேபோல பல நாட்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. பல வாடிக்கையாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும், ‘டி.டி.எச்’.,க்கு மாறி விட்டனர்.
இதனால், ஆபரேட்டர்கள் வருமானத்தை இழந்தனர். மீண்டும் அதே பிரச்னை தொடர்கதையாக இருக்கிறது. படித்த இளைஞர்கள் சுய தொழிலாக செய்யும், இந்த தொழிலை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. எனவே, முதல்வர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.