இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1.17 லட்சம் காவல் பணியாளருக்கு ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி கொரோனா உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையரகங்களுக்கு ரூ.44.46 கோடியில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தீ விபத்திலும், வெள்ளத்திலும் சிக்கிய ரூ.605 கோடி மதிப்புடைய உடைமைகளும் மீட்கப்பட்டுள்ளன. தீயணைப்பு, மீட்பு பணியாளருக்கு பயிற்சி தரும் விதத்தில் ரூ.39.30 கோடியில் கழகம் அமைக்கப்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பல்வேறு சீர்மிகு பணிகள் செய்யப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் மக்கள் அதிகம் கூடும் அனைத்து விழாக்களும் அமைதியாக நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.