சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.51,400-க்கு இன்று விற்பனையாகிறது.
மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை நிர்மலா சீதாராமன் குறைத்ததில் இருந்து, தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
இந்த வாரம், திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் தங்கம் விலை குறைந்தாலும் அடுத்த நாட்களில் உயர்ந்தது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,425-க்கும், பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.51,400-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரு.1.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.88-க்கு விற்பனையாகிறது.
இப்போது தங்கத்தின் விலை உயர்ந்தாலும் சரி, குறைந்தாலும் சரி, அது காலப்போக்கில் உயரும். குறிப்பாக அமெரிக்காவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது தங்கத்தின் விலை விரைவாக உயரும். இது புதிய உயரங்களை எட்டும் என நிபுணர்கள் நம்புகின்றனர். அமெரிக்க வட்டி விகிதம் செப்டம்பர் மாதத்தில் 0.5% ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தங்கம் விலையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.