பா.ஜ., வெற்றியை, ஜூன், 4ல் கொண்டாட தயாராகுங்கள் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமல்லி தலைமையில் , முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பெருங்கோட்டங்கள் கலைப்பு உட்பட கட்சி அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பேசியதாவது: ஜூன் 4ம் தேதி பா.ஜ.,வின் வெற்றியை கொண்டாடத் தயாராக இருங்கள். பா.ஜ., 3வது முறையாக ஆட்சிக்கு வருவது காலத்தின் கட்டாயம். தாமரை அடர்ந்து, படர்ந்திருக்கும் காட்சியை ஜூன் 4க்கு பின் அனைவரும் பார்ப்பார்கள்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் வடக்கு, தெற்கு என்ற பேச்சு இருக்காது. ஒரு தனிமனிதனை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்த்தாலும், இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகமாக, வலிமையாக 3வது முறையாக பா.ஜ., ஆட்சி அமைக்கும்.
இண்டியா கூட்டணியினரின் கனவுகளை மக்கள் சுக்குநூறாக உடைக்க உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் இல்லாத வகையில் நாட்டை எதிர்க்கக்கூடிய ஆதிக்க சக்திகள் அதிகமாகியுள்ளன. மோடியை தவறான வார்த்தைகளால் திட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here