#கெண்டிங் ஐலாண்ட் – 3
கெண்டிங் ஐலாண்ட் என்று கூறியதும் அது என்ன இடம் என்பதே எங்களுடைய எண்ணமாக இருந்தது…
பின்னர் தான் அந்த உள்ளூர் கெய்டு விரிவாக சொல்லத் தொடங்கினார்…
கெண்டிங் ஐலாண்ட் என்பது கேசினோ இருக்கும் பகுதி என்று…
இதை அவர் கூறியதும் அனைவரும் குஷியானார்கள்…
கெண்டிங் ஐலாண்டுக்கு செல்ல 1 மணி நேரத்திற்கும் அதிகமான நேரமானது..
எப்போது அந்த ஐலாண்ட் வரும் என்று அனைவரும் காத்திருந்தோம்… எங்கள் காத்திருப்பு வீண் போகவில்லை… கெண்டிங் ஐலாண்டை அடைந்தோம்..
அங்கிருந்து கேபிள் கார் வழியாக பயணம்.. சிறப்பான, தரமான பயணம்… அவ்வளவு அடி உயரத்திலிருத்து மேலே ஒரு சொர்க்க லோகத்தை எப்படி படைக்க முடியும் என்பதை அங்கு சென்றடையும் வரை என்னால் உணர முடியவில்லை… அந்த அற்புதமான பயணத்தை அழகாக ரசித்தேன்..
அங்கு போய் இறங்கியதும் முதல் வேலையாக ரிச்சர்ட் எங்களை அழைத்துச் சென்றது மதிய உணவுக்காக..
அனைவரும் மதிய உணவினை மனதார உண்டு மகிழ்தோம்…
அடுத்ததாக அனைவரையும் அழைத்துச் சென்று கேசினோ உலகம் இயங்கிக் கொண்டிருந்த அந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்தினார்..
2 மணிநேரம் டார்கெட்.. அதற்குள் அவர் குறிப்பிட்ட இடத்திற்கு அனைவரும் வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டார்..
நாங்கள் அனைவரும்.. அந்த கேசினோ உலகத்திற்குள் கால்பதிக்கத் தொடங்கினோம்..
சிலர் விருப்பத்தோடு வந்தார்கள்… சிலர் விருப்பமின்றி வந்தார்கள்.. சிலர் புகைப்படம் எடுக்க மட்டுமே வந்தார்கள்..
நான், விகாஷ் மற்றும் மதன் சார் என நாங்கள் அந்த நிழல் உலக கேசினோவைத் தேடி அழைந்தோம்.. ஒரு வழியாக அந்த உலகத்தினைக் கண்டடைந்தோம்…
Wow.. What a Miracle… இப்படி ஒரு உலகம் இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத உலகம்..
யார் சொன்னது.. சொர்க்கம் வானில் இருக்கிறதென்று… பூமியில் ஒரு நிலையான சொர்க்கத்தை கண்ணார கண்டு ரசித்தேன்…
உள்ளம் உவகையால் அலைமோதியது…
“அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்..
தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு..
அப்பாவி என்பார்கள்
தப்பாக நினைக்காதே..
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே ..
மது,மாது,சூது இது உண்டென்றால் சொர்க்கத்திலும் இடம் உண்டு’’
என்ற ரஜினியின் வார்த்தைகள் தான் கண்முன் வந்து போயின…
That’s All Your Honor… இதுக்கப்பறம் என்னப்பா இருக்கு என்று அந்த உலகத்திற்குள் கால் பதித்தேன்..
விகாஷ் மற்றும் மதன் சார் துணையோடு… ஒவ்வொரு விளையாட்டையும் உற்று நோக்கத்தொடங்கினேன்..
சூது விளையாட்டைப் பொருத்தவரை, சிலர் சில விஷயத்தைக் கவனிக்கத் தவறி விடுகிறார்கள்..
யார் வெற்றி பெறுகிறார்களோ… அவர்களைத் தான் அனைவரும் பின் தொடர்வார்கள்..
என்னுடைய ஃபார்முலா வேறு…
யார் எப்படி தோற்கிறார்கள் என்பதை முதலில் கண்காணிக்கத் தொடங்கினேன்..
தோற்றவன் ஏன் தோற்றான் என்பதை அறிந்து கொண்டால் வெற்றி பெறுவது மிக எளிது… ஆனால் இதை பலர் கவனிக்க மறப்பது தான் யாதார்த்தமான உண்மை…
நான் தோற்றவர்களை கவனிக்கத் தொடங்கினேன்..
அந்த கேசினோ உலகத்தில் பல விளையாட்டுகள் விளையாடப்பட்டன.. சிலர் வெற்றியோடு வெளியேறினார்கள்.. சிலரோ தோல்வியோடு வெளியேறினார்கள்..
ஆனால் அனைவருக்குள்ளும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஆசையும், வெறியும் இருந்ததை என்னால் உணர முடிந்தது…
இங்கு ஜெயித்தவர்களிடம் பாடம் பயில்வதை விட தோற்றவர்களிடம் பாடம் பயில்வதென்பதே மிகச் சிறந்த அனுபவம்…
நான் தோற்றவர்களிடம் பாடம் பயிலத் தொடங்கினேன்..
எங்கள் அலுவலக ஊழியர்கள் சிலர் தோற்று வெளியேறியதைப் பார்த்தேன்..
எங்கே அவர்கள் தோற்றார்கள்.. என்ன காரணத்தினால் தோற்றார்கள் என்று ஆராயத் தொடங்கினேன்…
முதற்கட்டமாக அந்த கேசினோ பகுதியை மொத்தமாக கண்களால் அளவெடுக்கத் துவங்கினேன்..
கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கு பணியாற்றுகிறார்கள்.. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அங்கு பணியாளர்கள் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்..
வாடிக்கையாளர்களிடம் அவர்கள் பேசும் வார்த்தை என்பது மிக மிக சொற்பமான வார்த்தைகள்…
தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கின்றனர்..
அங்கு வெற்றி பெற்றவர்களின் பணம் மிகவும் நேர்மையாக வழங்கப்படுகின்றன..
தொடர் கண்காணிப்பில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்வதால் அங்கு யாரும், யாரையும் ஏமாற்ற முடியாது என்பது நிதர்சனம்..
உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நீங்கள் வெற்றியாளராகளாம்.. துரதிருஷ்டம் இருந்தால் தோல்வியாளராகலாம்…
மற்றபடி வெற்றி தோல்வி என்பது உங்கள் லக்கைப் பொருத்தது மட்டுமே…
ஒகே இப்போது விஷயத்துக்கு வரலாம்..
முதலில் அங்குள்ள விளையாட்டுகள் அனைத்தையும் கண்காணித்தேன்..
பிறகு அங்கு தோற்றவர்கள் அனைவரையும் கண்காணித்தேன்…
நான் எப்படி விளையாட வேண்டும் என அவர்கள் மூலமாக கற்றுக் கொண்டேன்..
என்னைப் பொருத்தவரை விளையாட்டு என்பதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்பதால்… துணிந்து 100 ரிங்கிட்டை பந்தையமாக கட்டினேன்..
முந்தைய விளையாட்டை நான் கணித்திருந்த காரணத்தால் அடுத்ததாக அதன் அடுத்த கட்ட மூவ் இதுவாகத் தான் இருக்கும் என்று நம்பினேன்.. என் நம்பிக்கை வீண் போகவே இல்லை… 350 ரிங்கெட் வெற்றியாக கிடைத்தது..
அதை விகாஷ் மீண்டும் பணமாக்கிக் கொண்டு வந்தான்.
அடுத்ததாக மீண்டும் இன்னொரு விளையாட்டை முயற்சி செய்தேன்.. அதற்கும் கொஞ்சம் அனாலிசிஸ் தேவைப்பட்டது..
இந்த முறை 50 ரிங்கிட்களை மட்டும் பயன்படுத்தினேன்..
இந்த முறையும் வெற்றி எனக்குத் தான்.. 250 ரிங்கெட்டுகள் பரிசாக கிடைத்தது..
நான் இதோடு வெளியேறியிருக்க வேண்டும்.. ஆனால் ..ஆசை யாரை விட்டது..
அதுவரை அனாலிசிஸ் செய்து விளையாடியவன் கொஞ்சம் அவசரப் பட்டு விளையாடத் தொடங்கி விட்டேன்… 250 ரிங்கிட்டும் காலியானது..
மீண்டும் முயற்சி செய்தால் விட்டதைப் பிடித்திருக்கலாம்தான்.. ஆனால் எங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது…
நாங்கள் மீண்டும் எங்கள் குழுவோடு சேரவேண்டும்.. எங்களுக்காக எங்கள் குழு காத்திருக்க கூடாது என்பதால் அங்கிருந்து வெளியேறினோம்..
வந்தவரை லாபம் தான்..
விகாஷிற்கு மட்டும் அவனுக்குப் பிடித்த ஒரு ஐஸ்கிரீம் ஒன்றினை வாங்கிக் கொடுத்துவிட்டு எங்கள் குழு இருக்கும் இடத்தை நோக்கி இடம் பெயரத் தொடங்கினோம்..
இதன் மூலமாக நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான்..
மது,மாது,சூது என எதுவாக இருப்பினும் ”களவும் கற்று மற” என்பதே என் போதனை…
அப்பறமென்ன… மீண்டும் நாங்கள் கூட வேண்டிய இடத்தில் மற்றவர்களுக்காக காத்திருக்க தயாரானோம்…
நாங்கள் தான் முதலில் வந்து சேர்ந்தோம்.. மற்றவர்கள் யாரும் வரவில்லை… சரி அந்த நேரத்தினை என்ன செய்வது.?
காலம் பொன் போன்றதல்லவா… நேரத்தினை யாராவது வீண் செய்வார்களா…
நேரத்தினை வீணாக்காமல் நானும் மதன் சாரும்.. ஆளுக்கொரு பீர் அருந்தியபடி மற்றவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தோம்… !
So… We R Waiting For Our 7 MPS Family Members..!
-தொடரும்-
ர-ஆனந்தன்-