டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் செயல்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் தனது குடும்பத்துடன் ஜாபர் சாதிக் தலைமறைவானார்.

இந்நிலையில், அவரை தேடி தமிழகம் வந்த மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கு சொந்தமான வீட்டில் இன்று காலை சோதனை நடத்திய அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சீல் வைத்தனர். இதனையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர். அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் இதில் யார் யாருக்கு எல்லாம் தொடர்பு இருப்பது தெரியவரும் என கூறப்பட்டு வந்தது. மேலும், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விடக்கூடாது என்பதற்காக லுக் அவுட் நோட்டீசும் கொடுக்கப்பட்டு விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ஜாபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதுங்கி இருந்த ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here