தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு பகுதிகளில் தெருநாய்கள் மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்கள் சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து கடித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தெருவில் விளையாடிக் கொண்டிருந்த யாஸ்மிகா என்ற குழந்தையை நாய்கள் கடித்ததில் அவரது கன்னம் கிழிந்து தொங்கிய நிலையில் குழந்தைக்கு உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருவதால் இதற்கு நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி என்ற கேள்வி மக்களிடமும் எழுந்துள்ளது.