சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் நடத்த மருத்துவமனைக்கே நேரடியாக சென்றுள்ளார் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

சென்னை காவல்துறை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன் ஐபிஎஸ் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் என்ன நடந்தது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் விளக்க கொடுத்துள்ளனர்.

குற்றச்சம்பவம் நடத்த இடத்திற்கே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்றுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எந்த கெட்ட பெயரும் இதன் வாயிலாக வந்துவிடக்கூடாது என்ற காரணத்திற்காகவும் இந்த சம்பவம் மீண்டும் எங்கேயும் நடந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் உதயநிதி ஸ்டாலினே நேரடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here