நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியில்லை என அறிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 2 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று வெளியிட்டிருந்தார். இன்று மகா சிவராத்திரி மற்றும் மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி மூலம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here