இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மிரட்டலான நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் ‘தி கோட்’. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.126.32 கோடியை வசூலித்திருந்தது.
‘தி கோட்’ திரைப்படம் வெளியாகி 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் திரைப்படம் 288 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.