ரத்த சர்க்கரை கட்டுபடுத்த நீரிழிவு நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக நடை பயிற்சி செய்ய வேண்டும். மிதமான வேகத்தில் நடப்பது மிகவும் அவசியமாகும்.

walk

இந்நிலையில் தினமும் நடக்க வேண்டும். 30 முதல் 45 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும். தினமும் 10,000 ஸ்டெப்ஸ் தினமும் நடக்க வேண்டும். நல்ல நடை பயிற்சி உடல் எடை அதிகரிக்காமல் கட்டுபடுத்தும். இதனால் இதய ரத்த குழாய்யின் செயலாற்றும் தன்மை அதிகரிக்கும். அமெரிக்கன் டயபடிஸ் அசோசியேஷன் பரிந்துரைப்படி வாரத்தில் 5 நாட்கள் 30 நிமிடங்கள் வரை நடந்தால் டைப் 2 சர்க்கரை நோய் அதிகரிக்காமல் பார்த்துகொள்ளலாம்.

இந்நிலையில் நீங்கள் 5000 அடிகள் முதலில் நடக்க முயற்சி செய்ய வேண்டும். நாம் 10,000 அடிகளை நடப்பது நமது இலக்காக இருக்க வேண்டும். இந்நிலையில் உடல் பயிற்சியில் பலவகை இருந்தாலும், மிகவும் சுலபமானது மற்றும் நல்ல பலன்கள் கொடுப்பது நடை பயிற்சிதான்.

இந்நிலையில் நாம் நடப்பதால் நமது கிளைசிமிக் கட்டுப்பாடு அதிகரிக்கும். இந்நிலையில் சர்க்கரை நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ள நபர்கள், நடை பயிற்சி செய்யும்போது, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்பு 26 % குறைந்துள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் வாரத்தில் 150 நிமிடங்கள் ஆரோபிக் பயிற்சி செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல தொடர் நடைபயிற்சி நமது உடலில் சர்க்கரை அளவை குறைக்கும் .மேலும் எ1சி-யை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here