பவர் பாண்டி மற்றும் ராயன் ஆகிய படங்களை இயக்கிய தனுஷ் அடுத்து புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடலில் பிரியங்கா மோகன் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.