தனுஷ் 50 : அடுத்த அப்டேட் ரெடி!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவர் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது படங்களை இயக்குவது, தயாரிப்பது, பாடல்களுக்கான வரி எழுதுவது, பாடுவது என பலவித வேலைகளையும் செய்து பட்டையை கிளப்பி வருகிறார்.

D என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் தனுஷ், சமீபத்தில் கேப்டன் மில்லர் என்கிற வெற்றிப்படத்தை கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் கரம் கோர்த்து புது படங்களை கொடுத்து வரும் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் அவரது ஐம்பதாவது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

d3

பவர் பாண்டி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார் தனுஷ். அதனை தொடர்ந்து அவருடைய ஐம்பதாவது படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் அவரேதான் ஹீரோ. மேலும் இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. நடிகை நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், வரலட்சுமி சரத்குமார், அனிகா சுரேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே தனுஷின் ஐம்பதாவது படத்தில் நடித்திருக்கிறார்கள்.

வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் சம்பவங்களை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திர பெயர் காத்தவராயன். அதை சுருக்கி ராயன் என படத்திற்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். D50 என அழைக்கப்படும் ராயன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம் தனுஷின் கெரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ராயன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பே நிறைவடைந்தது. அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் 11 ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

d2

ஏப்ரல் 11 ராயன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷின் அனைத்து படங்களுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் தனுஷ் இயக்கி இருக்கிறார். இந்த பட வேலைகளும் முடிந்து இருக்கிறது. தற்போது தெலுங்கு இயக்குனருடன் ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.