மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை சென்னை கலைவாணர் அரங்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஆக.18) நடைபெறும் விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார்.
கருணாநிதியின் புகழ் மகுடத்தில் மற்றுமொரு வைரமாக அவரதுஉருவம் பொறித்த நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சராகவும், திமுகவின் தலைவராகவும், கருணாநிதியின் மகனாகவும் என் நன்றியையும், தொண்டர்களின் நன்றியையும் உரித்தாக்குகிறேன்.
மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் நாணய வெளியீட்டு விழாவில், தொண்டர்களைக் காண ஆவலுடன் இருக்கிறேன். எளிய விழா என்பதால் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சார்ந்த தொண்டர்கள் நேரில் காணவும், தமிழ்நாடு மற்றும் தமிழர்கள் வாழும் உலக நாடுகளிலும் நேரலையில் காணவும் அன்புடன் அழைக்கிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.