நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173 படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் படத்தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய பட அறிவிப்புடன், கமல் தனது நண்பர் ரஜினிக்கு அன்புக்கடிதம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த படம் 2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் #Thalaivar173 #Pongal2027 என தெரிவித்துள்ளார்.


