“அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்” – தயாரிப்பாளர் ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்

Priya
10 Views
2 Min Read

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்படக் கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ‘ரூம் பாய்’.

சி.நிகில் ஹீரோவாக அறிமுகமாகும் இந்தப் படத்தில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு, சாதனா, கவிதா விஜயன், கற்பகம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் . மும்பை மாடல் நிதி மரோலி, ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “இந்த விழாவிற்கு வரும் போது மனதில், நல்ல உணர்வுகள் எல்லாம் கலந்து என் மனசில் ஓடிக்கொண்டே இருந்தது. தயாரிப்பாளருக்கு இந்த படம் மிகப் பெரிய வெற்றி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது.

அவர்கள் என்னிடம் வந்து படத்தைப் பற்றி பேசும்போது நான் கேட்டேன் – ‘இந்த படத்துக்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள்?’ என்று. அதற்கு அவர்கள் ‘கோடிகளில் நிறைய செலவு செய்திருக்கிறோம்’ என்று சொன்னார்கள். அதற்கு நான் சொன்னேன் – ‘இன்றைய காலகட்டத்தில் நீங்கள் நிறைய செலவு செய்திருக்கிறீர்கள். ஆனால் அந்த அளவுக்கு படத்தில் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்’ என்றேன்.

பாடல் காட்சிகளும், சண்டை காட்சிகளும், ரசிகர்கள் எதிர்பார்க்கும் பல அம்சங்களும் நிறைந்த ஒரு முழுமையான படமாக இது இருக்கும் என்று முன்னோட்டத்திலும் பாடல்களிலும் தெளிவாக தெரிகிறது. நிகில் நன்றாக நடித்துள்ளார். இயக்குநர் மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படம் அனைவருக்கும் பெரிய வெற்றியை தர வாழ்த்துகள்” என்றார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன்,
“இன்று காலையில் தமிழ் திரைப்படத் துறையைச் சேர்ந்த முக்கியமான பலர் ஒன்றாக கூடி ஆலோசனை நடத்தினோம். தமிழ் சினிமா எந்த திசையில் செல்ல வேண்டும், அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற பல முக்கியமான முடிவுகள் அந்த சந்திப்பில் எடுக்கப்பட்டன. குறிப்பாக சின்ன படங்களுக்கு தியேட்டர்களில் தேவையான முன்னுரிமை கிடைக்க வேண்டும் என்பதையும் இன்று பேசினோம். அதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் சில முக்கியமான நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம்புகிறேன்.

புதிதாக சினிமாவுக்கு வரும் இளம் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் சில வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த ‘ரூம்பாய்’ திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். டிரெய்லர் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply