பிரபல நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜ் நிடிமோருவை இரண்டாவது முறையாகத் திருமணம் செய்து கொண்டார். தனது முதல் திருமண முறிவு மற்றும் உடல்நலக் குறைவு போன்ற பல சவால்களைக் கடந்து வந்த சமந்தா, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல், கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மைய வளாகத்தில் அமைந்துள்ள லிங்க பைரவி ஆலயத்தில் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
‘தி ஃபேமிலி மேன்’ மற்றும் ‘சிட்டாடல்’ போன்ற வெப் தொடர்களில் இணைந்து பணியாற்றிய போது ராஜ் நிடிமோருவுடன் மலர்ந்த நட்பு காதலாக மாறிய நிலையில், இந்தத் திருமணத்தின் புகைப்படங்களைச் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதைத் தொடர்ந்து, அவை தற்போது சமூக வலைதளங்களில் #Viral ஆகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.







