Bison: ‘உங்கள் உழைப்பும் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ – மாரி செல்வராஜூக்கு ரஜினிகாந்த் பாராட்டு!

பைசன் திரைப்படத்தைப் பார்த்து வியந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜுக்குத் தொலைபேசியில் வாழ்த்து!

prime9logo
186 Views
1 Min Read
Highlights
  • Bison திரைப்படத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாரி செல்வராஜைப் பாராட்டினார்
  • 'சூப்பர் மாரி, சூப்பர் பைசன்' என்று தொலைபேசி வாயிலாக ரஜினி வாழ்த்துத் தெரிவித்தார்.
  • மாரி செல்வராஜின் முந்தைய படங்களான 'கர்ணன்', 'மாமன்னன்' படங்களையும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி, இளம் நடிகர் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் வெளியாகி பெரும்  வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 இந்த வரிசையில் நடிகர் ரஜினிகாந்தும்  பைசன் திரைப்படத்திற்கு  தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பதிவில்,

‘சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘ -சூப்பர் ஸ்டார்

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply