50 ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா வீடு: சாவிகளை வழங்கி வாழ்த்திய நடிகர் பிரசாந்த்

Priya
8 Views
2 Min Read

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசாமி, கல்யாணமாலை மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பயனாளிக் குடும்பங்களுக்கு இல்லங்கள் முறையாகத் திறந்து வைக்கப்பட்டு, அதற்கான சாவிகளை நடிகர் பிரசாந்த் வழங்கினார்.

அதன்பிறகு பேசிய பிரசாந்த், ”சென்னையில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தொடங்கி இது 18 ஆம் ஆண்டு. இன்றைய நாளில் கூடுதல் சிறப்பு அம்சமாக ஒரு பணியை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தினர் தொடங்கியிருக்கிறார்கள்.

பொதுவாக கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதை தொடர்ந்து வீட்டை கட்டிப் பார் என்றும் சொல்வார்கள் அதற்கும் ஜோய் ஆலுக்காஸ் தங்களுடைய பங்களிப்பை இன்று தொடங்கி இருக்கிறார்கள். அதனை ஜோய் ஹோம்ஸ் என்று தொடங்கி இருக்கிறார்கள்.‌

வீடில்லாத… நிலமில்லாத… தமிழகம் முழுவதும் உள்ள மிகவும் கஷ்டப்படும் ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து, ஒரு தரமான – அருமையான – வீட்டை அவர்களுக்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது உரிமை. அது ‘எனக்கென்று ஒரு வீடு இருக்கிறது’ என கம்பீரமாக சொல்வதற்கு ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம்  வழிவகுத்திருக்கிறது. இதற்காக நான் அவர்களை மனமார பாராட்டுகிறேன். இது மிகப்பெரிய சந்தோஷம்.

வீடு மட்டுமல்லாமல், மக்கள் எங்கெங்கு கஷ்டப்படுகிறார்களோ… புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றாலும்… அவர்களை தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். இந்த கை உதவி செய்வதை அந்த கைக்கு தெரியாமல் செய்கிறார்கள். அந்த குடும்பத்தினர் முழுவதும் பொதுமக்களின் நன்மைக்காக தொடர்ந்து சேவை செய்து வருகிறார்கள்.  அதிலும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இதனை தொடர்ந்து செய்து வருவது சாதாரண விசயம் அல்ல மிகப் பெரிய விசயம்.  

நான் அனைவரிடமும் சொல்வது என்னவென்றால் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஜோய் தொலைநோக்கு சிந்தனை உள்ளவர். மனிதநேயமும் அன்பும் அக்கறையும் கொண்டவர். சிறந்த ரோல் மாடல்.  

தனி ஆளாக நின்று கடுமையாக உழைத்து இன்று ஜோய் ஆலுக்காஸ் எனும் பிரம்மாண்டத்தை உருவாக்கி இன்றும் எளிமையாகவும் பணிவாகவும் இருப்பவர். இது தொடக்கம் தான். இன்னும் ஐந்தாண்டுகளில் இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை இன்னும் விரிவடையும்.

ஜோய்ஸ் ஹோம் திட்டத்தில் வீடுகளை பெறும் பயனாளிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்

Share This Article
Leave a Comment

Leave a Reply