“ஜனநாயகன் படம் வெளிவர தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும்” – நடிகர் கார்த்தி

Priya
88 Views
3 Min Read

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு, சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய நடிகர் ஆனந்தராஜ், “இதற்கு முன்பாக வெளியிட திட்டமிட்டிருந்த தேதியை விட புதிதாக வெளியிட திட்டமிட்டுள்ள தேதி மிகவும் நல்ல நாள்.

இன்று நாளை நாங்கள் எம்ஜிஆர் நினைவிடம் சென்றோம், அங்கு சென்றதால் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது.

வா வாத்தியார் என்று தலைப்பை வைத்து விட்டு வாத்தியாரை பாக்காமல் எப்படி இருப்பது. அவருக்கு தரும் மரியாதையாக நினைத்து இந்த படத்திற்கு வெற்றியை தாருங்கள்.

இந்த படத்தை பாருங்கள் அப்போதான் இந்த கதை என்னவென்று உங்களுக்கு தெரியும். எம்ஜிஆரை நீங்கள் மீண்டும் பார்க்கவேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை நீங்கள் பாருங்கள், அவரை மிஸ் பண்றவர்கள் எல்லோருக்கும் இது ஒரு நல்ல படம்” என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசியபோது, “வாத்தியருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி பேச வேண்டும் என்று நினைத்தால் ஒரு மணி நேரம் ஆகிவிடும்.

பருத்திவீரன் திரைப்படத்தை விட கார்த்திக்கு இந்த படம் மிகவும் சவாலான படம்.

தம்பி ஆனந்தராஜ், சுந்தர்ராஜ் ஆகிய இருவரும் இன்னும் முடி கொட்டாமலே இருக்கிறார்கள் என்றார். உடனே ஆனந்தராஜ் விக் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மணப்பாறை மாடுகட்டினு இருந்திருப்போம் என்றார்.

நானும் கவுண்டமணியும் பேசிப்போம், விக் இல்லாமல் இருந்திருந்தால் நம் பொழப்பு என்ன ஆகியிருக்கும், இந்நேரம் மாடு மேய்த்திருப்போம் என்று பேசிப்போம்” என்றார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதாவது, “இன்றைய தேதியில் கடனே இல்லாத தயாரிப்பாளர் நான் மட்டும்தான். ஒரு தயாரிப்பாளரை பார்த்து அவர் மிகவும் நல்லவர், அதனால் அவர் ஐயோ பாவம் அவர் என்று சொல்லும் வார்த்தை மட்டும் வேண்டாம்.

இந்த இடத்தில் நான் சூர்யாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.உலக சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் மீது இப்படி ஒரு அக்கறை செலுத்துவார்களா என்று தெரியாது, ஆனால் என்னுடைய கஷ்டமான நேரத்தில் என்னை வழி நடத்தியவர் சூர்யா அண்ணா தான்.அவருக்கு என் நன்றி

பராசக்தி ஒரு புதிய மைல் ஸ்டோனை எட்டியுள்ளது. இதை விட ஒரு நல்ல தேதி அமையாது.விஜய் அண்ணாவின் கடைசி படம், கேவிஎன் எனக்கு சகோதரரை போன்றவர்.

ஜனநாயகன் திரைக்கு வராதது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம், இந்த நேரத்தில் நாங்களும் அவர் கூட நின்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி நிற்கமுடியாத சூழ்நிலை, அமேசான் OTT தளத்தில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த முறை தேதி தள்ளி போனால் எங்களால் எந்த ஒப்பந்ததையும் நிறுத்தி வைக்க முடியாது என்று சொல்லிவிட்டனர்.அதனால் இந்த முறை குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாக வேண்டும் என்று வேலை செய்து வருகிறோம்

எனக்கும் கார்த்திக்கும் பள்ளியில் ஆரம்பித்த எங்கள் நட்பு இன்று இது வரை உள்ளது, அவருக்கு என் நன்றி” என்றார்.

நடிகர் கார்த்தி, “போன வருடத்தில் பயங்கர கொண்டாட்டத்தோடு இந்த படத்தை வெளியிட திட்டமிட்டோம். என்னோட முதல் படமே பல பிரச்சினைகள் பிறகு தான் வெளிவந்தது. அதனால் இதுபோன்ற பிரச்சினைகள் வந்துகொண்டு தான் இருக்கும்.

சினிமா என்றால் என்ன என்று என் அப்பா நான் சிறுவயதியிலிருக்குமோது சொன்னது தான் நியாபகம் வருகிறது, ஒவ்வொரு அரிசியும் யாருக்கு போய் சேர வேண்டும் என்று இருக்கிறது, அதேபோல் தான் ஒவ்வொரு காட்சியிலும் யார் இருக்க வேண்டும் என்று உள்ளது.

நாம் ஓட வேண்டும் என்று நினைத்து நமது உடல்நலத்தை விட்டுவிடுகிறோம், அதனால் உடல்நலம் மிகவும் முக்கியம்.

நலன் இந்த படத்தை ஒரு சூப்பர் ஹீரோ கதையாக பண்ண வேண்டும் என்று நினைத்தார். அதனால் ஏன் சூப்பர் மேன் என்று போக வேண்டும், நம்ம ஊர் சூப்பர் ஹீரோ உள்ளாரே என்று தான் எம்ஜிஆர் அவர்களை மீண்டும் திரைக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து இதை எடுத்திருக்கிறோம்.

காலையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் நின்று வணங்கினோம், அங்குள்ள மனநிலையே வேற மாதிரி இருந்தது.

ரொம்ப நாள் கழித்து என்னுடைய திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் ஒரு சின்சியரான நடிகை கீர்த்தி ஷெட்டி.

எல்லாவற்றிற்கும் ஒரு பிளான் இருக்கிறது. ஜனநாயகன் படம் வெளிவர தாமதம் ஆனாலும், அது சரியான நேரத்தில் வெளியாகும் என்று நான் சொல்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply