காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக இருக்கும் ராகுல்காந்தி தனது 54வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 400 இடங்களை தாண்டும், காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களை கூட எட்டாது என பல அரசியல் வல்லுநர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஆனால் இந்த கருத்து கணிப்புகளை அடித்து உடைத்ததில் முக்கிய பங்கு ராகுல் காந்திக்கு உள்ளது. தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கூட பாஜகவால் கைப்பற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் முக்கிய காரணமாகும்.

அது மட்டுமில்லாமல் நாடு முடுவதும் தாம் மேற்கொண்ட நடை பயணமும் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக இருக்கும் ராகுல்காந்தி, தேர்தலில் இந்தியா கூட்டணி இன்னும் சற்று அதிகமான இடங்களை கைப்பற்றி இருந்தால் ராகுல் காந்தி இந்த நேரம் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று இருப்பார் என பத்திரிக்கைகளும், அரசியல் வல்லுநர்களும் தெரிவித்து

நேரு குடும்பத்தில் கடந்த 1970ம் ஆண்டு ஜுன் 19ம் தேதி ராகுல் காந்தி பிறந்தார். இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.

நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்தோடு ராகுல் காந்தியோடு எடுத்துக்கொண்ட புகைப்படம், தமிழகத்தை பெற்ற ராகுல் பேசியது, தேர்தல் பிரச்சாரத்தின் போது தனக்காக இனிப்பு வாங்கியது உள்ளிட்ட விடியோக்களை பகிர்ந்து ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here