‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியிடுதல், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தலுக்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர் புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு கலையரங்கில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரை முருகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 5914 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ. 17.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கீழடி திறந்தவெளி அருங்காட்சியம் மற்றும் 2325 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 22.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியம் ஆகியவைகளுக்கான அடிக்கல்லை நாட்டினார்.