இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே புதிய விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து இலங்கை செல்லும் பயணிகள் விமானத்தில் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தாலும், கொழும்பு சென்று தான் செல்ல வேண்டிய நிலை முன் இருந்தது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அலையன்ஸ் ஏர் நிறுவனம், யாழ்ப்பாணத்திற்கான தனது விமான சேவையை காலையிலேயே ஆரம்பித்துள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் நான்கு நாட்கள் இயங்கும்: திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி.
தற்போது, இண்டிகோ ஏர்லைன்ஸ் செப்டம்பர் 1 முதல் தினமும் மதியம் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே புதிய விமானங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது. கட்டணம் ரூ.7,604 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது