நாட்டில் விற்கப்படும் அனைத்து வகையான மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மாதந்தோறும் சோதனை செய்கின்றனர். மேலும் போலி மருந்துகள் கண்டறியப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த மாதம் சந்தையில் இருந்த மருந்துகளின் மாதிரிகளை சோதனை செய்தது. இதில், காய்ச்சல், அஜீரணம், பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட, 17 மருந்துகள் தரமற்றவை.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாக்டீரியா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஐந்து மருந்துகள் போலியானவை. எனவே, https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் தரமற்ற மற்றும் கலப்பட மருந்துகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here