சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கைகள்:

மேற்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால்,

ஜூலை 26, 2024 மற்றும் ஜூலை 27, 2024: தமிழ்நாடு, புதுபை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த மேற்பரப்பு காற்று வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 28, 2024 முதல் ஆகஸ்ட் 1, 2024 வரை: தமிழ்நாடு, புதுபை மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here