தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அதன்படி நேற்று தமிழகத்தில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மேலும் வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.