சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது சென்னையில் இருந்து புறப்படவிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம அழைப்பு வந்ததையடுத்து பயணிகள் அவசரமாக இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானம் இன்று காலை புறப்பட இருந்த போது திடீரென அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பின்னர் விமானத்தில் இருந்த 182 பயணிகள் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டனர், அதன் பிறகு விமானத்தை வெடிப்பு பாதுகாப்பு நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.