கோவை மற்றும் சென்னை விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தமிழ்நாட்டில் விமான நிலையங்களுக்கும், விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் என்பது தற்பொழுது தொடர்கதை ஆகிவிட்டது. அதன்படி, சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு இன்று இ-மெயில் மூலம் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விமான நிலைய கழிவறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் வெடிகுண்டு செயலிழக்கும் குழுவினர் மோப்ப நாய்களை பயன்படுத்தி விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் பயணிகளின் உடைமைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு ஏழாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் போலீசார் வழக்கு பதிவு செய்து இமெயில் அனுப்பியது யார்? விசாரணை நடத்தி வருகின்றனர்.